Pages

Wednesday, May 1, 2013

பிரான்சில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சபாலிங்கம் நினைவு தினம்!

Wednesday, May 01, 2013
இலங்கை::விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான திரு.எஸ்.சபாலிங்கம் அவர்கள் பிரான்சில்  புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 19 ஆவது நினைவு தினம் இன்று (01.05.2013) பிரான்சிலுள்ள அவரது நண்பர்களால் நினைவு கூரப்படுகின்றது.

1994ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி பிரான்ஸ் சார்சல் நகரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் வைத்து சபாலிங்கம் அவர்கள் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் பிரபல அரசியல் விமர்சகரும் புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து நடைபெற்றுவரும் இலக்கியச் சந்திப்புக்களின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகவும் ஆசியா பதிப்பகத்தின் ஸ்தாபகராகவும் திகழ்ந்தவர். இவர் பிரான்சில் வாழ்ந்த காலத்தில் மனித உரிமை அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணி இருந்தார்.

ஐரோப்பிய நாடுகளில்  புலிகள் ஆரம்பித்த முதலாவது படுகொலைத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கொலைக்கரங்கள் ஐரோப்பா வரை நீண்டு கொண்ட சம்பவமாக சபாலிங்கத்தின் படுகொலையை குறிப்பிடலாம்.        
 
 

No comments:

Post a Comment