Pages

Monday, May 27, 2013

தஞ்சம் கோரி அவுஸ்ரேலியா சென்ற பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

Monday, May 27, 2013
தஞ்சம் கோரி அவுஸ்ரேலியா சென்ற பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
அவுஸ்ரேலிய ஊடகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அவுஸ்ரேலிய கூட்டுப்படையினரால், கடலில் மிதந்த 8 உயிர் காக்கும் அங்கிகள் மீட்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
 
கொக்கோஸ் தீவுக்கு அருகில் இருந்து இந்த உயிர் காக்கும் அங்கிகள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக ஏ எப் பி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
கொக்கோஸ் தீவுகள் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் அமைந்திருக்கும் தீவாகும்.
 
எவ்வாறாயினும் மீட்கப்பட்ட காக்கும் அங்கிகள் எந்த நாட்டிக்கு சொந்தமானது என்ற விடயத்தை தெரிவிக்க அவுஸ்திரேலிய உயரதிகாரிகள் மறுத்துள்ளனர்

No comments:

Post a Comment