Tuesday, May 14, 2013

பொதுபலசேனா அமைக்கப்பட்டதன் பின்னர் முன்னர் ஒருபோதும் நோர்வேக்கு சென்று புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவில்லை: பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்!

Tuesday, May 14, 2013
இலங்கை::பொதுபலசேனா அமைக்கப்பட்டதன் பின்னர் முன்னர் ஒருபோதும் நோர்வேக்கு சென்று புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவில்லை என்று அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்
போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
முஸ்லீம் மக்களுக்கு எதிராக செயல்படும் பௌத்த அமைப்பொன்று தமிழ் புலம்பெயர்ந்தவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தலவாக்கலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தார்.
 
வளர்ந்து வரும் இந்த நாட்டை மீண்டும் தேசிய ரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கில் முயற்சிகள் அண்மைக்காலத்தில் பரவலாக அண்மைக்காலத்தில் இடம்பெற்று வருகின்றன.
 
அண்மையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த சிங்கள அமைப்பிற்கு நோர்வே ராட்சியமே ஆதரவை வழங்கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
ஒரு பிரிவினர், இந்த இயக்கத்தினரை அழைத்துச் சென்று புலம்பெயர்ந்தவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள ஒழுங்கு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
 
பௌத்தர்களான இவர்கள் எந்த காரணத்திற்காக இப்படியான செயல்பாடுகளில் இறங்கினார்கள் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.
 
அமைச்சரின் உரை குறித்து பொதுபலசேனாவில் செயலாளர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் கண்டனம் வெளியிட்டார்.
 
தமது அமைப்பு நோவே செல்லவில்லை என தெரிவித்த அவர் அமெரிக்காவிற்கு மட்டுமே தாம் சென்று, அங்கு பௌத்த அமைப்புக்களை மட்டுமே சந்தித்ததாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment