Saturday, May 04, 2013
இலங்கை::மிகச் சிறந்த சக்திகளை ஒன்றிணைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!
இலங்கை::மிகச் சிறந்த சக்திகளை ஒன்றிணைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ!
மிகச் சிறந்த சக்திகளை ஒன்றிணைத்து நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே அவர் இந்த கருத்தினைக் கூறினார்.
சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் போராசிரியர் கும்புருகமுவே வஜிர தேரருக்கு மியன்மார் அரசாங்கத்தினால் கௌரவப் பட்டம் வழங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஐம்பெரும் சக்திகளுடன் வேறு பல சக்திகளும் இணைந்து சிறந்ததொரு சக்தி கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சில சந்தர்ப்பங்களில் தீய சக்திகளும் அதனுடன் இணைந்துகொள்வதால் அவற்றில் சிறந்த சக்திகளை ஒன்றிணைத்து செயற்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மிகச் சிறந்த சக்திகளை ஒன்றிணைத்து, நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்வதற்கும் நாட்டின் சாசனத்தை பாதுகாப்பதற்கும் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கும் தேரரால் முன்னெடுக்கப்படுகின்ற பிரயத்தனங்களுக்கு மேலும் ஆசி கிடைக்கவேண்டும் என ஜனாதிபதி இதன்போது வாழ்த்து
தெரிவித்தார்.
No comments:
Post a Comment