Pages

Tuesday, May 14, 2013

புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவி தமிழினி வடமாகாண தேர்தலிலும் போட்டி?- எவ்வித உண்மையும் இல்லை: புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி!


Tuesday, May 14, 2013
இலங்கை::
புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் தமிழினி, எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விடுதலையாகவுள்ளார் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.          

 
 

No comments:

Post a Comment