Friday, May 3, 2013

பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும் : பா.ஜ.க வலியுறுத்தல்!

Friday, May 03, 2013
புதுடில்லி::சரப்ஜித்சிங் மரணம் குறித்து பாகிஸ்தான் நாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும் என்று

இது குறித்து நிருபர்களிடன் பேசிய அவர் கூறியதாவது:

இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடராதபடி, பாகிஸ்தான் மீது, இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும். அந்த நாட்டுடன் உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை கடுமையாக்க வேண்டும்.

காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மங்கச்செய்கிறது. இந்தியாவை பலவீன நாடாக காட்டுகிறது.

சரப்ஜித்சிங் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகையும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும்.

இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
கூறியுள்ளார்.

No comments:

Post a Comment