Friday, May 24, 2013

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Friday, May 24, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
இவ்வாறு அதிகாரங்களை வழங்குவதனால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென தெரிவித்துள்ளார். அரசாங்க அதிகாரி என்ற ரீதியில் நாட்டின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆலோசனை வழங்குவது தமது கடமை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிரச்சினைகள் ஏற்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
 
புலனாய்புப் பிரிவினரால் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயம் குறித்த அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment