Thursday, May 16, 2013

நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்! இலங்கை தமிழருக்கு பல்வேறு நலத்திட்டம்!

Thursday, May 16, 2013
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு  தமிழக அரசு சார்பில்  பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று நடந்த நிதித் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 112 முகாம்களில் 19,658 குடும்பங்களைச் சேர்ந்த 66,918 இலங்கைத் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 13,289 குடும்பங்களைச் சேர்ந்த, 34,826 அகதிகள் முகாம்களுக்கு வெளியில் வசித்து வருகின்றனர். அதிமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு இலங்கை தமிழ் அகதிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, முகாம்களில் 416 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 2012&13ம் ஆண்டில் ஸீ41 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அகதிகளாக இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை படிப்பிற்கு ஏற்ப ஸீ850 முதல் ஸீ4,700 வரை வழங்கப்படுகிறது. மேலும், முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு, ஸீ25 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொடர்ந்து 2,500 புதிய வீடுகள் கட்டுவதற்கும் ஸீ25 கோடியை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் முதலமைச்சரின் புதிய விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் முகாம்களுக்கு வெளியே வசிக்கும்  இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசின் மீது  பொருளாதார தடை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையை நட்பு நாடு என்று சொல்வதை இந்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும் தனி ஈழம் குறித்து இலங்கை வாழ் தமிழர்களிடமும் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து பிறநாடுகளில் வாழும் தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா சபையின் பாதுகாப்புக் குழுவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்ளும் தனித் தீர்மானம் பேரவையில் கடந்த 27.03.13 அன்று நிறைவேற்றப்பட்டது.
கடந்த 3.5.13 அன்று சட்டப் பேரவையில் இந்திய நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளை இலங்கை நாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டதை திரும்பப் பெற விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சியில், சட்டமன்ற மரபுகள் காக்கப்படுகிறது. மேலும், சட்டமன்றத்தில் ஜனநாயகம் காக்கப்படுவதும், எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் பேச அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment