Pages

Sunday, May 26, 2013

யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு நோர்வேயின் ஒத்துழைப்பு அவசியமானது: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, May 26, 2013
இலங்கை::யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திப் பணிகளுக்கு நோர்வேயின் ஒத்துழைப்பு அவசியமானது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முனைப்புக்களில் நோர்வே வழங்கிய ஒத்துழைப்பு நன்றி பாராட்டப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
கொழும்பில் நடைபெற்ற நோர்வே தேசிய தின நிகழ்வில் கலந்து கொண்ட போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீளமைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். உயர்கல்வித் துறையிலும் நோர்வே பல்வேறு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment