கோடை வெப்பம் தணிக்க நொங்கு உண்டு மகிழ்வோம்!!!
Tuesday, May 21, 2013
CANADA::(நக்சலைட் தீவிரவாதி பிரினைவாதி,(புலி பினாமி) சீமான்) தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? கூலிக்கேற்ற வேலை என்று வினையை விதைத்த சீமான்!
CANADA::(நக்சலைட் தீவிரவாதி பிரினைவாதி,(புலி பினாமி) சீமான்) தலைக்கு ஒரு சீயக்காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? கூலிக்கேற்ற வேலை என்று வினையை விதைத்த சீமான்!
18-05-2013 சனிக்கிழமை கடலூரில் சிறப்பான ஓர் கூட்டத்தை நடத்தி இலங்கை தமிழ் இனத்தை மீழமுடியாத சிக்கலுக்குள் அமுக்கியுள்ளார் செந்தமிழன் சீமான். தயாரிப்பாளர்களுக்குக் கதை சொல்லி அவர்களை ஏமாற்றிப் படம் எடுத்து அதில் சம்பாதிப்பதை விடவும் அதே கதையை புலிகளுக்காக மேடையில் பேசினால் கோடிகளைச் சுருட்டலாம் என்று மிகவும் காலதாமதமாக ஈழத்துப் படகில் ஏறிய சீமான் தனது லட்சியத்தில் பாதியை எட்டிவிட்டார். மீதி இனி முதலமைச்சர் ஆவதுதான் பாக்கி!
ஓர் தொலைக்காட்சிநேர்க்காணலில் சூடேறியசீமான், 'நீங்கள் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்குதானே கட்சியை ஆரம்பித்தீர்கள்?'என்றகேள்விக்கு, ஆம் ஆட்சியைப் பிடிப்பதற்குதான் கட்சியை ஆரம்பித்தேன் என்றார். தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவர் பயணம் செய்யும் பாதை இலங்கை தமிழர்களுடைய தோள்களாக உள்ளன. புலிகள் ஆதரவாளர்கள் கைகளில் பல ஆயிரம் கோடிகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொண்ட சீமான் ஈழம் பற்றி அவர்களுக்கே பாடம் நடத்தப் புறப்பட்டார். கனடா போன்ற நாடுகளில் இவரது உரையை, வாடகைக்கு மண்டபம் எடுத்து சி.டி.யில் திரையிட்டு கேட்டு ரசித்து மகிழ்ந்தனர் விவரம் தெரியாத வசதியானவர்கள்.
வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்றோரை ஓரம் கட்டி வாய்வீச்சில் வல்லவராகிவிட்டார் சீமான்! தமிழ் நாட்டில் மிகக் குறுகியகாலத்தில் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து பல கோடிகளைச் சுருட்டியவர் இவர்மட்டுமே! எங்காவது ஓர் மூலையில் மேடை அமைத்து முழங்கிவிட்டு, அதை அப்படியே கனடா, நோர்வேக்கு அனுப்பிவிடுவார். அங்கே இருப்பவர்கள் 'ஐயோ'என்று டாலர்களில் அனுப்பிவைத்தவர்கள் பலபேர்!
2013ல் எதை வைத்து கதை பேசுவது என்று தெரியாமல் 'தந்தி' தொலைக்காட்சிக்கு சிறப்பு நிருபராக சிறிது நாள் நடித்தார். இயக்கமும் நடிப்பும் அவரது தொழில் என்பதை வெளிநாடு வாழ் தமிழர்கள் மறந்துவிட்டனர் சிலகாலமாக! ஏதாவது ஒர் புரட்சி பண்ணினால்தான் தனது போட்டியாளர்களை வீழ்த்தி முதலமைச்சர் நாற்காலிவரை செல்லலாம் என்று ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணி தலைவரான, 'ஜாசின் மாலிக்'கை அழைத்து வந்துவிட்டார்.
கடலூருக்கு. இலங்கை தமிழரது விடுதலைக்கு ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணி தலைவரான,தீவிரவாதி 'ஜாசின் மாலிக்' ஆதரவு வழங்குவார் என்று கூறினார் கூட்டத்தில்.
சீமானுக்குப் பெருமையோ பெருமை! தீவிரவாதி மாலிக் ஆதரவு தருவதாகப் பேசிவிட்டார். ஆதலால் நோர்வே, கனாடாவிலிருந்து குறைந்த பட்சம் ஒருகோடியாவது இந்த மாதத்துக்குள் வந்து சேர்ந்துவிடும் என்றுபொங்கி வழிந்து, செல்வச் செழிப்பு தெரிந்தது அவரது முகத்தில்.
ஈழப் பிரச்சினையில் காஸ்மீர் பிரச்சினையைத் தொடர்புபடுத்தக் கூடாது என்று ஆரம்பகாலம் தொட்டே கவனமாக இருந்தனர் இலங்கை தமிழர்கள். வித்தியாசமாகப் படம் எடுக்கும் இயக்குனர்களின் படங்கள் போன்று, பின்விளைவு தெரியாமல் இலங்கை பிரச்சினையுடன் காஸ்மீர் பிரச்சினையையும் கோர்த்துவிட்டார் சீமான்!
இந்தியா இலங்கை பிரச்சினையில் தயக்கம் காட்டியவற்றில் காஸ்மீர் பிரச்சினையும் ஒன்றாக இருந்தது. தனது புகழுக்காகவும் பணத்துக்காகவும் ஜாசீன் மாலிக்கை இழுத்து வந்து இலங்கை பிரச்சினையில முடிச்சுப் போட்டு இந்திய அரசை தமிழரிடமிருந்து தூர விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் சீமான். விழுந்து விழுந்து விடுதலைக்காக உழைப்பது போன்று காண்பித்து பணம் தேடும் சீமான் விபரீதத்தைத் தொடுத்துவிட்டுள்ளார் இலங்கை தமிழர்களுடன்.வெளிநாடு வாழ் பைனான்சியர்களுக்கு ( புலிகளின் ஆதரவாளர்கள்) இதன் விபரீதம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இலங்கைபிரச்சினையில் உண்மையான வரலாறே இவர்களில் பலருக்குத் தெரியாது. அப்படியிருக்கையில் காஸ்மீர் பிரச்சினையின் பின்னணியும் இலங்கை தமிழ் இனத்தின் பின்னணியும் எப்படித் தெரிந்திருக்கப் போகிறது!
பணத்தை அள்ளி வீசினால் தமிழ் நாட்டில் பணிசெய்ய பலர் காத்திருக்கின்றனர் என்று கண்டு
பிடித்துள்ளனர் வெளிநாட்டு இலங்கை தமிழர்கள். நன்றாகக் குரைக்கிறவருக்கு அதிக பணம் அனுப்பி வைக்கின்றனர். குரைப்பதுடன் நிற்காமல் காஸ்மீர்காலைக் கடித்து இழுத்து வந்துவிட்டார் சீமான்.
பாதிப்பு சீமானுக்குக் கிடையாது மாறாக இலங்கை தமிழர்களுக்குத்தான்! நாம் தமிழர்கட்சியின் கூட்டத்தில் ஜாசின் மாலிக்கை அழைத்து வந்து, தமிழ் நாட்டைத் துண்டாடுவேன் என்று கூறியிருந்தால் துணிந்த தலைவன்தான் என்றுபோற்றலாம். அவரோ இலங்கை தமிழர் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி இழுத்து வந்து சந்தேகத்தையும் விளைவுகளையும் இலங்கை தமிழர் தலையில் கட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் (புலிகளின் ஆதரவாளர்கள் ஈழவிடுதலை) விரும்பிகள் தங்களது பணத்தைக் கொண்டுதமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்திவிடலாம் என்று கணிப்பது தவறானதாகும். இந்திய அரசுக்கு தலைவலியை ஏற்படுத்துவதன் மூலம் எங்கள் இனத்துக்கு விடுதலை கிடைக்கப் போகிறது என்று யாராவது சொன்னால் அது உண்மைக்குப் புறம்பானதாகும். இந்திய அரசு இலங்கை தமிழர்களுக்கு உதவிகள் செய்யவேண்டும் என்றால் அதற்கான வழிகள், திட்டங்கள் வேறு உள்ளன. எதிர்ப்பை வளர்த்து, சந்தேகங்களை வளர்த்து, உள்நாட்டு அரசியலில் மூக்கை நுழைத்து, வேறு இனப் பிரச்சினையை இழுத்துவந்து எங்கள் தலையில் கட்டிபோய்ச் சேரவேண்டிய இடத்துக்குச் செல்லாமல் தடைகள் தாண்டுவதையே தலையெழுத்தாக மாறிவிடக் கூடாது.
கடந்த காலங்களில் இதனைத்தான் புலிகளின் ஆதரவாளர்கள் செய்தனர். நட்புக் கொள்ளவேண்டியவர்களைப் பகைப்பதும், பகைக்கவேண்டியவர்களுடன் நட்புக் கொள்வதும் பின்னர் அதற்கு ராஜதந்திரம் என்றுபொய் விளக்கம் கொடுப்பதும் வரலாறாக இருந்துவந்தது.
தயவுசெய்து சீமான் போன்ற நபர்களுக்குப் பணம் அனுப்பி பிரினைவா த்துக்குப் பாதை அமைக்கும் பணியினைச் செய்யவேண்டாம் என்று இலங்கை தமிழர்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். விலைகொடுத்து விடுதலை வாங்கமுடியாது. பணத்துக்காக நடிப்பவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். அதிலும் சினிமாவும் அரசியலும் தமிழகத்தில் பணத்தை மையமாகக் கொண்டவை. வெளிநாட்டு இலங்கை தமிழரது பணம் சிலர் வளமுடன் வாழ பயன்படுமே தவிர விடுதலைக்கு இதுவரையில் எந்தப் பயனையும் தந்தது கிடையாது.
தெரிந்துகொண்டால், விளங்கிக் கொண்டால் இலங்கை தமிழருக்கு நன்மை கிட்டும். கூலி கொடுத்து விடுதலைக்கு ஆள் பிடிக்கவேண்டாம். கூலிக்கேற்ற வேலை என்று நினைத்து வினையை விதைத்துக் கொண்டிருக்கிறார் அந்தக் கூலியாள்சீ மான்.







No comments:
Post a Comment