Monday, May 13, 2013
இலங்கை::புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.
தற்போது வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழினி விரைவில் விடுவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழினி நீதிமன்றத்தினால் சகல குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட உள்ளார்?
இதற்கு தேவையான நடவடிக்கைகளை புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன் மேற்கொண்டுள்ளார். அதேவேளை வட மாகாண சபைத் தேர்தலில் முன்னாள் புலி உறுப்பினர்கள் பலர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

No comments:
Post a Comment