Pages

Friday, May 10, 2013

இலங்கை மின்சார சபையில துப்பாக்கி முனையில் கொள்ளை; கொள்ளையர்கள் கைது!

Friday, May 10, 2013
இலங்கை::இலங்கை மின்சார சபையின் நுகேகொடை அலுவலகத்தினுள் பிரவேசித்து 10 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்ற இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
மஹர பகுதியிலுள்ள வீடொன்றில் மற்றுமொரு பெண்ணுடன் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.
 
கொள்ளையடித்த பணத்தைக்கொண்டு அவர்கள் தங்கம் மற்றும் முச்சக்கர  வண்டி ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 
அண்மையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் நுகேகொடை மின்சார சபை அலுவலகத்திற்கு சென்று குறித்த இரண்டு சந்தேகநபர்களும் அங்கிருந்த பெண் ஊழியரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி 10 இலட்ச ரூபாவை கொள்ளையிட்டு தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment