Pages

Saturday, May 4, 2013

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களில் மாற்றம் செய்யப்படக் கூடிய சாத்தியம்?

Saturday, May 04, 2013
இலங்கை::வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களில் மாற்றம் செய்யப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் சாசனத்தில் திருத்தங்களை செய்வதன் மூலம் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
காணி அதிகாரங்களை முழுமையாக மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், காவல்துறை அதிகாரங்களின் முக்கியமானவற்றை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
 
இது தொடர்பான நகல் வரைவுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நகல் வரைவுத் திட்டம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
 
மோட்டார் போக்குவரத்து தொடர்பான காவல்துறை அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனையவற்றை மத்திய அரசாங்கம் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
 
பிரதம நீதியரரின் பதவிக் காலத்தையும் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை காலமும் பிரதம நீதியரசரின் பதவிக் காலம் நிர்ணயிக்கப்படாததுடன், ஓய்வு பெற்றுக் கொள்ளும் வயதெல்லை 65 என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது பதவி வகிக்கக் கூடிய கால எல்லை நிர்ணயிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment