Friday, May 10, 2013
இலங்கை::பிராந்திய வலயத்தில் அமெரிக்க தலையீடுகளை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இலங்கை::பிராந்திய வலயத்தில் அமெரிக்க தலையீடுகளை இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பிராந்திய வலயத்தின் பல்வேறு விடயங்களில் அமெரிக்கா தலையீடு செய்து வருவதாகவும், இதனை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மாலைதீவில் இராணுவ முகாம் அமைப்பது தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் அமெரிக்க வானொலிச் சேவையொன்றை நடாத்துவதற்கு கடந்த காலங்களில் இந்தியா எதிர்ப்பை வெளியிட்டிருந்தது எனவும், தற்போதைய இந்திய தலைவர்கள் அதிகாரமற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ராஜாங்கச் செயலாளர் ஹலரி கிளின்ரன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு வழங்கிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இலங்கையர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால் காணி காவல்துறை அதிகாரங்களைப் பயன்படுத்தி சிங்கள முஸ்லிம் மக்களை மாகாணத்தை விட்டு வெளியேற்றும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:
Post a Comment