Friday, May 10, 2013

படையினர் ஞாபகார்த்த மாதம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது!

Friday, May 10, 2013
இலங்கை::படையினர் ஞாபகார்த்த மாதம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக பிரகடனம் செய்து வைக்கப்பட்டது.
 
நேற்றுக் காலை அலரி மாளிகையில் இந் நிகழ்வு நடைபெற்றதுடன் முதலாவது படையினர் கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டதையடுத்து படையினர் ஞாபகார்த்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டது.
 
எதிர்வரும் ஜூன் 8ம் திகதி வரை படையின் மாத நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இம்மாதத்தில் படையினர் சம்பந்தமான பல்வேறு நிகழ்ச்சிகளை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
 
2008 மார்ச் 10ம் திகதியன்று மன்னாரில் பலியான கே.எம்.யூ. எஸ்.கே. உடுகமவின் மகளினால் நேற்று ஜனாதிபதிக்கு முதலாவது கொடி அணிவிக்கப்பட்டது. அச்சமயம் படையினரின் குடும்பங்களுக்கு ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்ட சேவைகளுக்காக ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
 
கடந்த வருடம் படையினர் கொடி விற்பனை மூலம் கிடைத்த வருமானம் மாகாண ஆளுநர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. இந்த நிதி படையினரின் குடும்பங்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ரணவிரு சேவை அதிகார சபைக்குக் கையளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன, மாகாண ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ,

முப்படைத் தளபதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment