Tuesday, May 14, 2013

மீகொடையில் 650,000 கொள்ளை; இருவர் கைது, பொறுப்பதிகாரி பணி நீக்கம்!:-சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்தபோது திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்!

Tuesday, May 14, 2013
இலங்கை::மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் நுழைந்து துப்பாக்கியைக் காட்டி அங்கிருந்த இரண்டு வர்த்தக நிலையங்களில் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவைக் கொள்ளையிட்டு தப்பிச்சென்ற இரண்டு சந்தேகநபர்கள் மிரிஹான குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
சந்தேகநபர்களிடமிருந்த துப்பாக்கி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
 
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் கடற்படையிலிருந்து விலகியவர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஐவர் அண்மையில் மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திற்குள் நுழைந்து பணத்தைக் கொள்ளையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இந்த சம்பவம் காரணமாக மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தின் பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
 
கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் அவர் காவலரணில் இருக்கவில்லை என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்...
 
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்தபோது திருகோணமலையில் கைது!
 
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்தபோது திருகோணமலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன்  பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
 
அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்த நால்வர் திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment