Wednesday, May 08, 2013
இலங்கை::இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 30 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்.

ராமேசுவரம் மீனவர்கள் 30 பேர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தலைமன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய-மாநில அரசுகளுக்கு மீனவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மேலும் பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
இதுதொடர்பான வழக்கு இலங்கை தலைமன்னார் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 30 பேர் நிரபராதிகள் என்றும், அவர்களை விடுவிக்க எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தது.
இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 மீனவர்களும் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, அவர்கள் இன்று மாலை 4 மணி அளவில் இந்திய கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்று மாலை 7 மணி அளவில் அவர்கள் தமிழக கரையை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு அல்லது நாளை காலை மீனவர்கள் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment