Friday, May 10, 2013
ராமேசுவரம்::இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 6-ந் தேதி சிறைபிடித்து செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 30பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 6-ந் தேதி 656 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.
ராமேசுவரம்::இலங்கை கடற்படையால் கடந்த மாதம் 6-ந் தேதி சிறைபிடித்து செல்லப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 30பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 6-ந் தேதி 656 விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. கச்சத்தீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதிக்கு மின்னல் வேகத்தில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர்.
அப்போது, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர் சங்க தலைவர் தேவதாஸ், மார்ட்டின், ஆரோக்கிய குரூஸ், புவனேந்திரன், அந்தோனிஅடிமை ஆகியோருக்கு சொந்தமான 5விசைப்படகுகளை 30மீனவர்களுடன் சிறைபிடித்து சென்றனர். இந்த படகில், ராமேசுவரம் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் சேசுராஜா, ஆறுமுகம், தினேஷ், செல்வம், சென்ரின், சந்தியா, பாக்சன், வில்டன், சுதாகர், முருகவேல், பரமேஸ்வரன், நீலகண்டன், முனியசாமி, ராதாகிருஷ்ணன், நிர்மல்பாபு, தங்கராசு, குமரவேல், தனபால், வடிவேல், முனியசாமி, தங்கதுரை, சந்திரசேகர், அயன்ராசு, பிரேம்குமார், மாரீஸ்வரன், கசவம், ஜான்சன், சந்திரன், ஜோன், அந்தோனிபிச்சை ஆகிய 30மீனவர்கள் இருந்தனர்.
இவர்கள் அனைவரும் விசாரணைக்குபின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனுராதபுரம் சிறயிைல் அடைக்கப்பட்டனர். இந்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ்டுபட்டு வருகின்றனர். மத்திய அரசு ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்யும் என்று நீண்ட நாட்களாக மீனவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஏமாற்றமே ஏற்பட்டதால் மீனவர்கள் அனைவரும் பெரிய அளவிலான போராட்டத்திற்கு தயாராகி வந்தனர்.
மன்னார் கோர்ட்டில் ஏப்ரல் 18, 26 மற்றும் மே மாதம் 6-ந் தேதி என மாறி மாறி ஆஜர்படுத்தப்பட்டு வந்தும் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக முதல் அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசை வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினார். முதல் அமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தது. இதன்படி நேற்று இலங்கை தலைமன்னார் கோர்ட்டில் மீனவர்கள் அனைவரும் நீதிபதி ஆனந்தி கனகராஜ்முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலங்கை அட்டர்னி ஜெனரல் ராமேசுவரம் மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் அனுப்பி உள்ளதை தொடர்ந்து மீனவர்கள் 30பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஆனந்தி கனராஜ் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் இலங்கை கடற்படையால் அழைத்துவரப்பட்டு இந்திய கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை பத்திரமாக அழைத்து வந்து ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு பத்திரமாக ராமேசுவரம் வந்தடைந்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது:-
இலங்கை கடற்படையினர் எங்களை எல்லைதாண்டி மீனபிடிக்க வந்ததாக கூறி கைது செய்தனர். இலங்கை சிறையில் எங்களுக்கு முறையான சாப்பாடு, குடிநீர் எதுவும் வழங்கவில்லை. இலங்கை தமிழ் அமைச்சர்கள் வந்து சந்தித்த பின்னர்தான் இலங்கை அதிகாரிகள் எங்கள் மீது சிறிதளவு அக்கறை கொண்டனர். விடுதலையான பின்னர் இலங்கை கடற்படையினர், இனி எல்லைதாண்டி எங்கள் பகுதிக்கு வந்தால் சிறையில் அடைத்து விடுவோம். அதன்பின்னர் யார் சொன்னாலும் விடமாட்டோம். சிறைதான் உங்களுக்கு நிரந்தரமாகி விடும் என்று எச்சரித்தனர். இவ்வாறு கூறினர். ஒரு மாதத்திற்கு மேல் இலங்கை சிறையில் இருந்துவிட்டு திரும்பிய மீனவர்களை கண்டதும் அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கட்டித்தழுவி கண்ணீர்மல்க வரவேற்றனர்.
.jpg)
No comments:
Post a Comment