Pages

Wednesday, May 22, 2013

இலங்கை கடற்படை சிறைபிடித்த, புதுச்சேரி மீனவர்கள், 26 பேர், நாளை விடுவிப்பு!

Wednesday, May 22, 2013
மண்டபம்::இலங்கை கடற்படை சிறைபிடித்த, புதுச்சேரி மீனவர்கள், 26 பேர், நாளை, விடுவிக்கப்படுகின்றனர். புதுச்சேரி, காரைக்காலில் இருந்து, ஏப்., 5ம் தேதி, 26 மீனவர்கள், மீன்பிடிக்க சென்றனர். எல்லை தாண்டியதாகக் கூறி, இலங்கை கடற்படையினர், இவர்களை சிறைபிடித்தனர். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களை, கெயிட்ஸ் கோர்ட், நேற்று முன்தினம், விடுதலை செய்தது. இலங்கை கடற்படை, அவர்களை அழைத்து வந்து, மண்டபம் அருகே, இந்திய கடலோர காவல் படையிடம், நேற்று, ஒப்படைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கடலில் பலத்த காற்று வீசுவதால், நாளை, 23 ம் தேதி, ஒப்படைக்க உள்ளதாக, மீனவர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment