Saturday, May 4, 2013

2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பில்:அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையேயான சந்திப்பொன்று தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது!

Saturday, May 04, 2013
இலங்கை::அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் இடையேயான சந்திப்பொன்று  நேற்று மாலை தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.
 
2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு தொடர்பிலே இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
 
இதன் போது உத்தேச வட மாகாண தேர்தலுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் தொடர்பான பிரச்சனைகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
 
அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர்களிடம் கருத்துக்கள் இதன்போது பெற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளரொருர் கூறினார்.
 
இதனைத்தவிர அரசியற்கட்சிகளின் பதிவு மற்றும் சொத்துக்கள், பொறுப்புகள் தொர்பிலும் இந்தக் கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா வடக்கில் தேர்தல் ஒன்று நடைபெறுமானால் சர்வதேச கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியது மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.
 
இந்த சந்திப்பில் ஜே.வி.பி. இன் சார்பில் கலந்து கொண்ட சட்டதரணி சுனில் வட்டவல தமிழ் நாட்டில் உள்ள இலங்கை அகதிகளையும் வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொண்ட முறை தொடர்பில் பிரச்சனை நிலவுவதாக குறிப்பிட்டார்.
 
அதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் எமது செய்திப் பிரிவிற்கு கருத்து தெரிவிக்கையில், வடக்கு தேர்தல் குறித்து ஜனாதிபதி இதுவரை தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கவில்லை என தெரிவித்தார்..

No comments:

Post a Comment