Pages

Saturday, May 11, 2013

2013 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களை இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும்: தேர்தல்கள் செயலகம்!

Saturday, May 11, 2013
இலங்கை::2013 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவேட்டில் திருத்தம் மேற்கொள்வதற்கான மாதிரி விண்ணப்பப் படிவங்களை இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
 
சில வாக்காளர்கள் தங்களை பதிவு செய்துகொள்வதில் அக்கறை செலுத்துவதில்லை என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
 
இதற்கமைய, வாக்காளர்களை தெளிவுபடுத்துவதற்கான விசேட திட்டமொன்று இம்முறை முன்னெடுக்கப்படவுள்ளது.
 
வாக்காளர் பதிவேட்டு திருத்தப் பணிகளை மேற்கொள்வதில் சுமார் ஒருவருட காலம் கடந்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில் பணிகளை மேலும் துரிதப்படுத்துவதற்கு இம்முறை கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிடுள்ளார்.
 
 

No comments:

Post a Comment