Pages

Saturday, May 18, 2013

13 ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது!

Saturday, May 18, 2013
புதுடில்லி::13 ம் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என இந்தியா, இலங்கையிடம் கோரியுள்ளது.
 
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித், இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு தொலைபேசி மூலம் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
 
மாகாணசபைகளின் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை ரத்து செய்ய இலங்கை அரசாங்கம் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
13ம் திருத்தச் சட்டம் தொடர்பிலான வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கமே மீறிச் செயற்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
13ம் திருத்தச் சட்டத்திற்கு அப்பாட்பட்ட தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதாகவே இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
 
காணி காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தற்போது ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
காரைக்கால் மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ{டன் இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
அப்போது, காரைக்கால் மீனவர்கள் 26 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்றும், நவம்பர் முதல் இலங்கையில் சிறையில் உள்ள மேலும் 5 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
மேலும் இலங்கையின் வடக்குப்பகுதியில் தேர்தல் நடத்துவது தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.
 
பேச்சுவார்த்தையின் போது, இந்தியா-இலங்கை மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment