Pages

Wednesday, May 15, 2013

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய ஜாதிக ஹெல உறுமய கட்சி பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது!

Wednesday, May 15, 2013
இலங்கை::13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய ஜாதிக ஹெல உறுமய கட்சி பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது.அரசியல் சாசனத்திலிருந்து இந்த திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு உத்தேச பிரேரணை ஒன்றை கட்சி பாராளுமன்றில் சமர்ப்பிக்க உள்ளது.கட்சியின் மத்திய செயற்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
 
தங்களது சுய தீர்மானத்திற்கு ஏற்ற வகையில் இந்த பிரேரணைக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க கட்சித் தலைவர்கள் ஆவண செய்ய வேண்டுமென கட்சித் தலைவர்களிடம் மத்திய செயற்குழு கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது.
 
இந்த உத்தேச பிரேரணை தயாரிக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசயில் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இந்த பிரேரணை தொடர்பில் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment