Sunday, May 12, 2013

ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் கைது!:-12 வயது சிறுவனை துஷ்பிரயோகப்படுத்தியவர் கைது!

Sunday, May 12, 2013
இலங்கை::தம்புத்தேகம பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சந்தேகநபர் பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்த சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
சந்தேகநபர் தம்புத்தேகம வைத்தியசாலையின் சிற்றூழியராகவும் போர்கலை பயிற்றுவிப்பாளராகவும் கடமை புரிவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
45 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான சந்தேகநபரை தம்புத்தேகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
 
12 வயது சிறுவனை துஷ்பிரயோகப்படுத்தியவர் கைது!
 
கட்டுகஸ்தோட்ட பகுதியில் 12 வயதான சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவரை நேற்று  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
 
சந்தேகநபர் 37 வயதான திருமணமாகாத ஒருவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
 
சிறுவன் பாடசாலை சென்று வீடு திரும்பியபோது சந்தேகநபரால் பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சிறுவனின் நண்பர்கள் அவனது தாயாருக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
 
இதன்பின்னர், தாயார் செய்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபர் நேற்றுக் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment