Wednesday, May 22, 2013
இலங்கை::வெலிக்கடை சிறைச்சாலையில் தடத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் 100 பேர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.நிர்வாக வசதி கருதி பெண் கைதிகள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜீ.எஸ்.விதானகே குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் விற்பனை தொடர்பில் கைதுசெய்ய்ப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகளே வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்ததாகவும் அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.
அண்மையில் அதிகாரிகள் சிறைக்கூடத்தை சோதனையிடச் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் அந்த கைதிகள் அதற்கு சந்தர்ப்பத்தை வழங்காது கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதிகளவான கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவர்களை நிர்வகிப்பதில் சிறைச்சாலை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment