Pages

Wednesday, April 3, 2013

சுற்றுலா விடுதியொன்றின் குளியலறையில் ரஷ்யப் பிரஜை தூக்கிட்டு தற்கொலை!

Wednesday, April 03, 2013
இலங்கை::கட்டுநாயக்க விமான நிலைய வீதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றில் வெளிநாட்டவர் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
 
ரஷ்ய பிரஜையொருவர் தாம் தங்கியிருந்த சுற்றுலா விடுதியின் குளியலறையில் கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.
 
உயிரிழந்தவரின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரண விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
 
கட்டுநாயக்க பொலிஸாரினால் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

No comments:

Post a Comment