லண்டன்::பிரித்தானிய தீம் பார்க்கில் பறக்கவிடப்பட்டிருந்த புலிக் கொடி அகற்றப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜை ஒருவர் இது தொடர்பில் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுக்கு உயர்ஸ்தானிகராலயம் முறைப்பாடு செய்துள்ளது. லண்டனின் புறநகர்ப் பகுதியான மிட்சாமில் இந்த புலிக்கொடி பறக்க விடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய உலக நாடுகளின் கொடிகளுடன் இந்தக் கொடியும் பறக்கவிடப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தடை செய்யப்பட்ட புலிபயங்கரவாத அமைப்பு ஒன்றின் கொடியே இவ்வாறு பறக்கவிடப்பட்டுள்ளதாக இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் குறித்த தீம் பார்க் நிர்வாகத்தினருக்கு தெளிவுபடுத்தியதாகவும், இதன் பின்னர் இந்தக்கொடி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment