Pages

Thursday, April 11, 2013

கோட்டே, மஹரகம, வெயங்கொடை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது!

Thursday, April 11, 2013
இலங்கை::கோட்டே, மஹரகம, வெயங்கொடை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
 
கோட்டே மாதிவெல பகுதியில் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 31 வயதான ஒருவரும் 27 வயது அவருடைய மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
மிரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தகநபர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய போதைப் பொருள் விநியோகஸ்தர் ஒருவர் மஹரகமவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அங்குலானை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறினர்.
இந்தப் போதைப் பொருள் விற்பனையுடன் தொடர்படைய மேலும் சிலரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதேவேளை வெயங்கொடை பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டிருந்த மூவர் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை ஜா-எல பகுதியில் 500 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்
ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment