Monday, April 15, 2013
இலங்கை::இலங்கைச் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளன. வெகு விரைவில் அதி நவீன ரக ஆயுதங்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து இவ்வாறு நவீன ரக ஆயுதங்களை வழங்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.
கண்ணீர் புகைக் குண்டு போன்ற பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி கலகங்களை தடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெலிக்கடையில் இடம்பெற்ற கலகத்தின் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் ரி56 ரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தனர்.இதனால் பாரியளவு உயிர்ச் சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் இடம்பெறக்கூடிய இவ்வாறான கலக நிலைமைகளின் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு நவீன ரக ஆயுதங்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment