Pages

Sunday, April 28, 2013

கனேடிய அரசாங்கம் பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்!

Sunday, April 28, 2013
இலங்கை::கனேடிய அரசாங்கம் பக்கச் சார்பாக செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கனேடிய வாழ் புலம்பெயர் தமிழர்களின் தாளத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் ஆடி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்துள்hளர்.
 
நல்லிணக்கத்தை ஏற்படுத்த உள்நாட்டு ரீதியான பொறிமுறைமையொன்று உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு வழிகளில் முயற்சி எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் தற்போது சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர் என கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
 

No comments:

Post a Comment