Pages

Sunday, April 7, 2013

தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்த அகில இந்திய பௌத்த பிக்குமார் சபை தீர்மானித்துள்ளது!

Sunday, April 07, 2013
மும்பை::தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தங்களுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்த அகில இந்திய பௌத்த பிக்குமார் சபை தீர்மானித்துள்ளது.
 
மஹாராஷ்ரா மாநிலம் நாக்பூர் நகரில் எதிர்வரும் 13 ஆம் திகதி இந்த பேரணியும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் பௌத்தர்கள் அதிகம் வாழும் பிரதான நகரில் உள்ள புனித புத்த விகாரையில் இருந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் வரை இந்த பேரணி நடத்தப்பட உள்ளது.
 
மாநில முதன்மை செயலாளர், அரசியல்வாதிகள், ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு மகஜர்கள் கையளிக்கப்பட உள்ளன. 2500 வருடங்களுக்கு மேல் இருந்து வரும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு, உறவு முறைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்கு செய்துள்ளதாக அகில இந்திய பௌத்த பிக்குமார் சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டித்து அதற்கு எதிராக தமிழக கத்தோலிக்க திருச்சபையினரும் எதிர்ப்பு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். 
 
 

No comments:

Post a Comment