Pages

Monday, April 22, 2013

ஜா-எல – காவல்துறை நிலைய சிறைக்கூடத்தல் கைதி ஒருவர் தற்கொலை!

Monday, April 22, 2013
இலங்கை::ஜா-எல – காவல்துறை நிலைய சிறைக்கூடத்தல் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
இவர் நேற்று சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
 
குடியிருப்பு ஒன்றிட்கு அத்துமீறி உள்நுழைந்தார் என்று குற்றச்சாட்டில் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
நேற்று மாலை வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதான யா-எல, துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றை அடுத்து இந்நபர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
சம்வம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

No comments:

Post a Comment