Pages

Wednesday, April 17, 2013

ஹெரோயின் போதைப் பொருளுடன் மெகசின் சிறைச்சாலையில் பெண்ணொருவர் கைது!

Wednesday, April 17, 2013
இலங்கை::ஹெரோயின் போதைப் பொருளுடன் மெகசின் சிறைச்சாலையில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குறித்த பெண்ணிடமிருந்து 100 போதைப் பொருள் பக்கெட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்திர ரத்ன பல்லேகம தெரிவித்தார்.
 
சந்தேகநபரான பெண், கைதி ஒருவரைப் பார்வையிடச் செல்லும்போது உணவுப் பொதிக்குள் போதைப்பொருள் பக்கெட்களை மறைத்து எடுத்துச்செல்ல முயன்றுள்ளார்.
 
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகள் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

No comments:

Post a Comment