Friday, April 19, 2013
ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இன்றைய தினம் 39 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் ஜெரால்டன் துறைமுகத்தைச் சென்றடைந்த 66 புகலிடக் கோரிக்கையாளர்களில் 39 பேரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். உரிய வீசா இன்றி நாட்டுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி முதல் இதுவரையில் 1004 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பெருமளவு பணத்தைச் செலுத்தி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதில் பயனில்லை என்பதே, இந்த நாடு கடத்தல்களின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment