Pages

Monday, April 15, 2013

குவைட் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பணிக்காக சென்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் 88 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்!

Monday, April 15, 2013
இலங்கை::குவைட் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பணிக்காக சென்ற நிலையில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் 88 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

குவைட்டில் இருந்து 72 பெண்கள் நாடு திரும்பியுள்ள நிலையில் 16 ஆண்கள் சவுதியில் இருந்து நாடு திரும்பியுள்ளதாக எமது வானூர்தி நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாடு திரும்பிய பெண்களில் ஒருவருக்கு இரண்டரை மாதம் குழுந்தை ஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு கொடுப்பனவுகள் எவையும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இவர்கள் மீண்டும் நாடு திரும்ப அந்த நாட்டு அரசாங்கம் விமான சீட்டுக்களை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, இவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்வற்கான ஏற்பாடுகளை இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
 

No comments:

Post a Comment