Pages

Wednesday, April 3, 2013

14 நாட்களுக்குப் பிறகு என்ஜினீயரிங்-கலைக்கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன!

Wednesday, April 03, 2013
சென்னை::இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் அனைத்தும் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டன.

அனைத்து என்ஜினீயரிங் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் வெற்றி பெற்றது. அதன்பிறகும் மாணவர்கள் போராட்டம் தணியாததால் கல்லூரிகள் திறக்கப்படுவது தள்ளிப் போனது.

கல்லூரிகள் திறக்கப்படாததால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று பெற்றோர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து இன்று முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று அனைத்து என்ஜினீயரிங் மற்றும் கலைக் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன. தேர்வு நெருங்குவதை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களும் இன்று கல்லூரிக்கு வந்திருந்தனர்.

No comments:

Post a Comment