Sunday, March 17, 2013
இலங்கை::இலங்கையின் இறைமையை பாதுகாக்க பூரணமான ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சீன ஜனாதிபதி ஜின்பிங், தொலைபேசி மூலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நெருங்கிய உறவுகள் பேணப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தலில் வெற்றியீட்டிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜின்பிங்கிற்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவு நீடித்து வருவதாகவும், சீனாவின் ஒத்துழைப்பை இலங்கை மக்கள் வெகுவாக பாராட்டி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் பௌதீக ஒருமைப்பாடு மற்றும் இறைமை போன்ற விவகாரங்களில், இலங்கை முழுமையான ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், சீனாவின் புதிய ஜனாதிபதி க்சீ ஜின்பின்னுக்கும் இடையில் நேற்று தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை சுமார் 20 நிமிடங்கள் நீடித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சீனாவிற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ஜின்பின்னுடன், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் குறித்து பேசப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment