Pages

Thursday, March 28, 2013

சட்டசபையில் இருந்து திமுக, காங். வெளிநடப்பு!

Thursday, March 28, 2013
சென்னை::தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், திமுக சட்டமன்ற தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து, ஒரு ஆங்கில பத்திரிகையில் செய்தி வந்துள்ளது தொடர்பாக பேச முயன்றார். சபாநாயகர்: திடீரென்று வந்து இப்படி சொன்னால் எப்படி, முன்னதாக என்னிடம் அனுமதி கேட்டக வில்லை. பத்திரிகையில் ஆயிரம் செய்தி வருகிறது. நீங்கள் முன்னதாக என்னிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். இன்று காலை அவைக்கு வந்து பத்திரிகையை கொடுத்தால், எப்படி விவாதத்துக்கு எடுத்து கொள்ள முடியும். அலுவல் ஆய்வு குழுவில் முடிவு செய்த பிறகு தான் அவையில் பேச அனுமதி கொடுக்க முடியும். அதனால், இது குறித்து பேச இப்போது அனுமதி வழங்க முடியாது. இது பற்றி விவாதிக்க மறுத்ததை தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் மு.க.ஸ்டா லின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

சபாநாயகர்: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்று முன்னதாகவே திட்டமிட்டு இங்கு வந்து பிரச்னை செய்கிறார்கள். அவர்களது நடவடிக்கையை கண்டிக்கிறேன். வெளியில் வந்த மு.க.ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழல் நடந்து இருப்பதாக செய்தி வந்துள்ளது. இது பற்றி சட்டசபையில் பேசுவதற்கு நேரம் ஒதுக்க சபாநாயகரிடம் அனுமதி கேட்டேன். அதற்கு அனுமதி தரவில்லை. பல்லவன் போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் இயந்திர டெண்டர் வெளியிட்ட அன்றே நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்துக்கு முன் அனுபவம் எதுவும் இல்லை. அதையும் மீறி டெண்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் டெண்டரில் முறையான டாக்குமெண்ட் பிரின்ட் இல்லை. அனைத்தும் கையால் எழுத்தப்பட்டு, மோசடி நடந்துள்ளது. இது பற்றி பேச அனுமதி தராததால் திமுக வெளிநடப்பு செய்தது. இவ்வாறு மு.க.ஸ்டா லின் கூறினார்.

காங்கிரஸ் வெளிநடப்பு

சட்டசபையில் இன்று வெளிநடப்பு செய்த பின்னர் காங்கிரஸ் எம்எல்ஏ கோபிநாத் நிருபர்களிடம் கூறியது: நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில் மத்தியில் உள்ள ‘கை நல்ல கை அல்ல‘ என்றார். முதல்வர் பேசுகையில் மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி உதவி செய்வதில்லை, மண்ணெண்ணெய் அளவை குறைத்து விட்டது, பழிவாங்கும் கையாக செயல்படுகிறது என்றார். இதை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். மத்திய அரசு தமிழகத்துக்கு போதுமான அளவு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது

No comments:

Post a Comment