Pages

Tuesday, March 19, 2013

புத்த துறவிகள் மீது தாக்குதல்: இலங்கை மக்களின் தமிழக பயணத்துக்கு தடை?- இலங்கை அரசு ஆலோசனை!

Tuesday, March 19, 2013
இலங்கை::தமிழ்நாட்டில் இலங்கைக்கு எதிரான போராட்டம் வலுவடைந்துள்ளது. ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் மனித உரிமை மீறல் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி மணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும், தன்னார்வ அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு வந்த 2 புத்த துறவிகள் தாக்கப்பட்டனர். சிங்கள சுற்றுலா பயணிகளும் வெளியேற்றப்பட்டனர்.

இதுபோன்ற சம்பவங்களை தொடர்ந்து இலங்கை மக்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா பயணம் செல்ல தடை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த தகவலை இலங்கை வெளியுறவு துறை அமைச்சக செயலாளர் கருணாதிலக் அமுனுகமா தெரிவித்துள்ளார். தமிழ் உணர்வாளர்களின் இத்தகைய செயல்பாட்டினால் இலங்கை மக்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே தமிழகத் துக்கு செல்பவர்களின் பாதுகாப்பை 2 நாட்டு அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும் என மந்திரி ஆறுமுகன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்துக்கு செல்லும் இலங்கை மக்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதால் இருநாடுகளுக்கும் இடையே உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இந்த விசயத்தை வலியுறுத்தி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தமிழக முதல்-அமைச்சருக்கு இ- மெயில் அனுப்பி இருந்தார். கடந்த வருடம் இதுபோன்று தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்ற நிலையில் தமிழ்நாட்டுக்கான பயண தடைகளை இலங்கை அரசு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment