Pages

Sunday, March 17, 2013

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணைகளுக்கு முகங் கொடுக்க தயார்!

Sunday, March 17, 2013
இலங்கை::இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட யுத்த குற்றச்சாட்டு தொடர்பான புகைப்படம் மற்றும் ஒளிநாடாக்கள் தமது நிறுவனம் உள்ளிட்ட சில ஊடக நிறுவனங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளதாக பிரித்தானியா ஒளிபரப்பு கூட்டுதாபனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இவை லண்டனை தலைமையகமாக கொண்ட தமிழ் அமைப்புக்களால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மனித உரிமைகள் மாநாடு ஆரம்பமானபோது, சனல் 4 தொலைக்காட்சி இவ்வாறானதொரு ஒளிநாடாவை ஒளிபரப்பியது.

இந்த புகைப்படங்கள் மற்றும் ஒளிநாடாக்கள் முற்றிலும், உண்மைக்கு புறம்பானது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 20 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை மற்றும் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை ஆகியவற்றுக்கு முகங் கொடுக்க தயார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் உள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பாதுகாப்புத் தரப்பினர், பெற்றுத்தந்த சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும், அமைச்சர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment