Pages

Saturday, March 9, 2013

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது!

Saturday, March 09, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக்  (புலி)கூட்டமைப்பு நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக திவயின  பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது!

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக திவயின  பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது சுவிட்சலாந்துக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு விசேட கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றனர்.

நாட்டுக்கு எதிராக பொய்யான தகவல்களைத் தெரிவித்து புலம்பெயர் தமிழ் சமூகத்தை இலங்கைக்கு எதிராக திசை திருப்பும் வகையில் இந்த கருத்தரங்குகள் அமைந்துள்ளன.

சுவிட்சர்லாந்தின் சில நகரங்களில் இவ்வாறான கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.

போர் நிறைவடைந்த போதிலும் காணிகளை படையினர் கொள்ளையிடுவதாகவும், வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவி வருவதாகவும் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறெனினும், புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் குறித்து இந்தக் கருத்தரங்குகளில் எவ்வித கருத்தும் வெளியிடப்படுவதில்லை என குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment