Pages

Tuesday, March 19, 2013

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு மின்னஞ்சல் கோரிக்கை:மற்றும் இந்திய தமிழக அரசாங்கங்களுக்கு கோரிக்கை - ஆறுமுகன் தொண்டமான்!

Tuesday, March 19, 2013
இலங்கை::இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் வழிபாட்டாளர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் கோரியுள்ளார்

இந்தக்கோரிக்கை இந்திய மற்றும் தமிழக அரசாங்கங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவங்கள் இந்திய இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையில் நிலவும் உறவுக்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்று அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்

எனவே இந்தப்பிரச்சினையில் உரிய தீர்வுகளை இந்திய மற்றும் தமிழக அரசாங்கங்கள் மேற்கொள்ளவேண்டும் என்று அமைச்சர் கேட்டுள்ளார்

இதேவேளை தமிழகம் சென்ற இலங்கையின் வழிபாட்டாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமுக்கு மின்னஞ்சல் கோரிக்கையை விடுத்துள்ளார்

இது தமிழர்களுக்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு பங்கம் விளைவிக்கக்கூடும் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment