Pages

Thursday, March 14, 2013

இலங்கைக்கு எதிராக சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை தொடர்பாக இறுதி நேரத்தில் இந்தியா உதவும் - இலங்கை!

Thursday, March 14, 2013

இலங்கை::சர்வதேச மனித உரிமை ஆணையத்தில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை தொடர்பாக, இந்தியா தமக்கு சாதகமாக செயற்படும் என்று இலங்கை நம்புவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இறுதியுத்ததின் போது போக்குற்றம் இடம்பெற்றதாகவும், அது குறித்து சர்வதேச அளவில், நம்பிக்கைக்குரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, அமெரிக்கா, ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

இந்த தீர்மானத்தின் மீதான விவாதம், நாளை ஆரம்பமாகவுள்ளது.

இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ம் திகதி, நடக்கிறது

இந்த தீர்மானத்தின் போது இடம்பெறும் விவாதத்தில், அரசாங்க தரப்பு நியாயத்தை எடுத்துரைப்பதற்காக, அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஜெனிவாவுக்கு சென்றுள்ளார்.

இதற்கிடையே, இலங்கை வெளியுறவு செயலர் கருணதிலக அமுனுகம குறிப்பிடுகையில், அமெரிக்கா தாக்கல் செய்துள்ள தீர்மானம் தொடர்பாக, இறுதி நேரத்தில், இந்தியா, தங்களுக்கு சாதகமாக வாக்களிக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment