Pages

Monday, March 4, 2013

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு!:சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர்: சகாதேவன்!வடமாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பின் சுரேஷ் //மாவை ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராகச் செயற்படுவோம்//ஆனந்தசங்கரி கூட்டமைப்புக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்திருப்பது அவருடைய வாக்கு வங்கி அரசியலாக காணப்படுகின்றது - சகாதேவன்!

Monday, March 04, 2013
 இலங்கை::கோமாளிகளே தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு பயங்கரவாதிகளுக்கு இது ஒரு தொழிலே தவிர மக்களுக்கான பணி அல்ல என்பதனை உம்மைப்போன்ற தமிழ் தேசியம் பேசும் பயங்கரவாதிகள் உணரும்வரை அவர்களின் காட்டில் பண மழை பொழிந்து கொண்டே இருக்கும். 1947ம் ஆண்டு முதல் அவர்கள் பேசியது தமிழ் தேசியமே தவிர வேறு எதனைப் பேசினார்கள். உலகின் பிரபலமான சட்டவல்லுனர் என ஜி.ஜி பொன்னம்பலத்திற்கு பட்டமளிப்பு செய்தார்கள், ஈழத்துக் காந்தி என எஸ்.ஜே.வி செல்வநாயக் அவர்களை அழைத்தார்கள். தானைத் தளபதி என அமிர்தலிங்கத்திற்கு பட்டமளிப்பு செய்தார்கள், சாவதேசப் பயங்கரவாதியான பிரபாகரனுக்கு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி எனவும், சூரியக்கடவுள் எனவும் மணிமகுடம் தரித்தார்கள். உங்களைப்போன்ற சர்வ முட்டாள்கள் இருக்கும்வரை அவர்களின் மனைவிமார்களும், வாரிசுகளும் வெளிநாட்டில் சுகபோக வாழ்க்கை அனுபவிக்க நீங்கள் வாக்களியுங்கள் உங்களின் வாய்களுக்கு வாய்க்கரிசி போடுவதற்குகூட அவர்கள் வரப்போவதில்லை அத மட்டுமே உங்களுக்கு நடக்கப்போகின்றது.

தமிழ் தேசியவாதியின் அறிக்கை:-

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்புக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுகள் காரணமாக தமிழ் மக்கள் தங்களது சுய உரிமையை வென்றெடுக்க முடியுமா என்ற அச்சத்தை போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் சங்கத்தின் தலைவர் விநாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பில் தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைய பெற்றுத்தருவதாகக் கூறி அவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்திருப்பது அவருடைய வாக்கு வங்கி அரசியலாக காணப்படுகின்றது. இவரின் உள்நுளைவைத் தொடர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

இதேவேளை வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன் மாவை சேனாதிராஜா ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராகச் செயற்படுவோம்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் ஒன்றாக இருந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் மக்களின் கருத்திற்கு முன்னுரிமை வழங்காது தன்னிச்சையாக முடிவெடுத்தால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் அதற்கு எதிராக செயற்படும்.யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னாள் புலிபோராளிகள் அனைவரையும் ஓரணியாகத் திரட்டி இவர்களுடைய அரசியல் வேலைத்திட்டத்தை எதிர்ப்பதோடு மக்களுக்குரிய புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்போம்’ என்றார்.

No comments:

Post a Comment