Pages

Saturday, March 9, 2013

தீர்மானம் தொடர்பில் அமெரிக்கா இலங்கையின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டும்: புலி ஆதரவு தரப்பு வெற்றியடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது புலிகள் மீள ஒருங்கிணைய வழிகோலும் - சுப்ரமணியம் சுவாமி!

Saturday, March 09, 2013
US::இலங்கையில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரேரணை வரைவு தொடர்பாக கொழும்புடன் பேசி கருத்தொற்றுமை ஒன்றை எட்டவேண்டுமென ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி அமெரிக்காவின் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

தீர்மானம் தொடர்பில் அமெரிக்கா இலங்கையின் கருத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டுமென சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது.

இலங்கையின் இணக்கப்பாட்டுடன் இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் பிளக்கிடம், சுப்ரமணியம் சுவாமி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்தத் தீர்மானமானது புலிகளுக்கு ஆதரவான தரப்பிற்கு வெற்றியாகும் வகையில் அமையக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு புலி ஆதரவு தரப்பு வெற்றியடையும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது புலிகள் மீள ஒருங்கிணைய வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைகளை ஜனநாயக ரீதியில் நியமிக்கப்பட்ட உள்நாட்டு அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் எனவும், சர்வதேச சக்திகளின் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 புலி ஆதரவாளர்கள் சர்வதேச அமைப்புக்களின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இரு தரப்பு இணக்கப்பாட்டின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி அதன் அடிப்படையில் இலங்கைக்கு நடவடிக்கை எடுக்க வழியமைத்துக் கொடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.........

புலிகளுக்கு நெருக்கமான பிரிவினை சக்திகளின் வெற்றியாக இந்த தீர்மானம் விளங்கிக்கொள்ளப்படலாம் எனவும் இது புலிகளின் மீட்சிக்கு வழிவகுக்கும் எனவும் அது யாருக்கும் நல்லதல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

மனித உரிமை மீறல்கள் விசாரணை ஜனநாய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொஸ்னியா அல்லது சயர் நாடுகளை போன்றதல்ல எனவும் அவர் கூறினார். இலங்கையை கட்டாயப்படுத்தி ஏற்றுக்கொள்ளவைக்கும் ஒரு விசாரணையை சர்வதேச ரீதியில் நியமிக்கப்பட்ட எந்த அமைப்பும் மேற்கொள்ளும் சாத்தியமில்லை. ஏனென்றால் ரஷ்யாவும் சீனாவும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தீர்மானம் இலங்கையின் மீது எதனையும் கட்டாயப்படுத்தி திணிக்கப்போவதில்லை எனவும் அது சர்வதேச அமைப்பு ஒன்றை விசாரணைக்காக அமைக்ககோருவதாக அமையாது எனவும் இராஜதந்திர திணைக்கள அதிகாரிகளின் பேச்சிலிருந்து தான் அறிந்து கொண்டதாக சுவாமி தெரிவித்துள்ளார்.

இது புலிகள் சார்ந்த சக்திகளுக்கு ஒரு பெரிய பின்னடைவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment