Pages

Wednesday, March 13, 2013

ஜப்பான் - இலங்கை ராஜதந்திர சந்திப்புகள்!


Wednesday, March 13, 2013
இலங்கை::ஜப்பானுக்கான நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஜப்பான் முன்னாள் பிரதமர் யசுவோ புஃகுடாவை சந்தித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் பிரதமர் இலங்கையில் சமாதானம் மற்றும் அபிவிருத்திகள் குறித்து திருப்திகொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டோக்கியோவில் உள்ள தாமா விலங்கியல் பூங்காவிற்கு சென்ற ஜனாதிபதி, இருநாட்டு ராஜதந்திர உறவுகளுக்கு அறுபதாண்டுகள் நிறைவை முன்னிட்டு இரண்டு யானைக்குட்டிகளை நிறைவுச் சின்னமாக கையளித்தார்.

அத்துடன், டோக்கியொ இம்பிரியல் விருந்தகத்தில், இலங்கை உணவு கண்காட்சியையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்துள்ளார்.

இன்று அதிகாலை ஜப்பானை சென்றடைந்த ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment