Pages

Thursday, March 7, 2013

அவுஸ்திரேலியாவில் யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் ஒருவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு!

Thursday, March 07, 2013
அவுஸ்திரேலியா::அவுஸ்திரேலியாவில் யுவதி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர் ஒருவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

டிலக்சன் செல்வராஜா என்ற 21 வயதுடைய குறித்த இலங்கையர், இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாக சென்றிருந்தார்.

இந்த நிலையில் அவர் சிட்னி முகாமில் மேலும் 60 அகதிகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த மாதம் முகாமிற்கு முன்னால் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவி ஒருவரையே இவ்வாற அவர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து நேற்று பராமட்டா உள்ளுர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்ட போது, அவர்ரை தொடர்ந்தும் சிறையில் வைக்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment