Friday, March 8, 2013

ஹலால் சான்றிதழ் சர்ச்சையை தொடர்ந்து இராணுவத்திற்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்தி;ப்பொன்று நடைபெற்றுள்ளது!

Friday, March 08, 2013
இலங்கை::இராணுவத்திற்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஹலால் சான்றிதழ் சர்ச்சையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பொதுபல சேனா அமைப்பினருடனும் இராணுவத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும், முஸ்லிம் சமூகத்திற்கு பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் இராணுவத்தினர் உறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்து முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியூதீன், ஏ.எல்.எம். அதாவுல்லா, ஏ.எச்.எம் பௌசீ ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முஸ்லிம் மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment