இலங்கை::மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கற்றுக் கொடுக்கும் வல்லமை இலங்கையிடம் காணப்படுவதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் ஜெனீவாவில் இலங்கைக்கு மனித உரிமைகள் குறித்து பாடம் கற்பிக்க முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை விவகாரங்கள் குறித்து கட்டளைகளை பிறப்பிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரே குறித்த நாடுகள் மனித உரிமைகள் பற்றி பேசுவதாகவும், இலங்கை 2500 செழுமையான வரலாறு காணப்படுவதாகவும் மனித உரிமை தொடர்பில் நீண்ட வரலாறு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்றும் மனித உரிமைகள் குறித்து அமெரிக்காவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் பாடம் கற்பிக்கும் வல்லமை இலங்கையிடம் காணப்படுவதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்

No comments:
Post a Comment