Pages

Tuesday, March 19, 2013

தனி ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு : மதிமுக, வி. சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!

Tuesday, March 19, 2013
ஆவடி::அயப்பாக்கத்தில் மதிமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கூட்டாக ஆர்ப்பாட்டம் நடத்தி, ராஜபக்சேவின் கொடும்பாவியை கொளுத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் வலுத்துள்ளது. அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இணைந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட துணை செயலாளர் ஷாஜி தலைமை வகித்தார். மதிமுக மாவட்ட பிரதிநிதி வைகோ விஜய் முன்னிலை வகித்தார். திடீரென ராஜபக்சேவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகிகள் செல்வா, மில்லர், பால்ராஜ், சிவா, ரமேஷ், பாக்கியராஜ் உள்பட கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment